மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாப்பான்குளத்தில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி பத்மா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் கடையத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் வெள்ளிக்குளம் மெயின் ரோட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக பத்மா நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பத்மா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.