Categories
சினிமா தமிழ் சினிமா

“காதல் பற்றி பகிர்ந்த பிரதாப் போத்தன்”…. கடைசி பதிவு இணையத்தில் வைரல்…!!!!!

நடிகர் பிரதாப் போத்தன் காதல் குறித்து தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனின் கண்கலங்க வைக்கும் கடைசி பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் கமலின் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம் லக்கி மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த இவர் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் வலம் வந்தார்.

முதன்முதலாக தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1985 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவும் இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு வருடத்திலேயே இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்த இவர், 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு கெயா போத்தன் என்ற மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் தனியாக வசித்து வந்த பிரதாப் போத்தன் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது கடைசி பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காதல் தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், தொடர்ந்து சிலர் அதிக அக்கறை காட்டுவார்கள் அதை காதல் என்று நினைக்கிறேன் என்று ஏ.ஏ.மில்னே வின்னி திபூஹ் வரிகளை பதிவிட்டுள்ளார். மேலும் வாழ்க்கை தொடர்பான பல பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |