Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள்.

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தன வரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இன்று கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்துக்கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

இன்று உங்களின் உடல் நிலையிலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சிறிது முயற்சி செய்தால் வெற்றிப்பெறலாம். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

Categories

Tech |