தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொளியாக தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி,திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை மட்டும் காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Categories