Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் மினி மாரத்தான் போட்டி”…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செஸ் போட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று செஸ் ஒலிம்பியாட்  விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய மினி மராத்தான் ஓட்டத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார். இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ மாணவிகள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடியுள்ளனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அரசு விளையாட்டு விடுதி மாணவிகள் தங்களுடைய முகத்தில் செஸ் பலகை மாதிரி வரைந்து உள்ளனர்.

மேலும் செஸ் ஒலிம்பியாட்  சின்னத்தையும் ஏந்தி சென்றனர். அதேபோல சிலம்பாட்ட குழுவினரின்  சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த மினி மாரத்தான் ஓட்டம் தலைமை தபால் நிலையம், பஸ் நிலையம், ஏ எம் சி சாலை, சாலை மார்க்கெட், மெயின் ரோடு, வெள்ளை விநாயகர் கோவில், அரசு மருத்துவமனை வழியாக ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறைவு பெற்றுள்ளது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரிஸ், மக்கள் செய்து தொடர்பு அலுவலர் சீனிவாசன், விளையாட்டு பயிற்சியாளர்கள் உடற்கல்வி ஆசிரியர் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |