பொது காப்பீடு நிறுவனங்களை ஒன்றாக இணைக்க மத்திய அரசு தீர்மானம் செய்துள்ளது
அரசுக்கு சொந்தமான மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இதை மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார். நேஷனல் இன்சுரன்ஸ், யுனைட்டட் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய பொது காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் முடிவுக்கு அந்நிறுவனங்களின் இயக்குனர் வாரியங்கள் முதற்கட்ட ஒப்புதல் அளித்திருப்பதாக ராஜீவ் குமார் கூறினார். இணைப்புக்குப் பிறகு அரசின் பொது காப்பீட்டு நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.