கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்தும், மாணவி மரணத்திற்கு நீதி கேட்டும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் காவல்த்துறை வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தினர். சக்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட பள்ளி பேருந்து வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.