Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்”…. பாரசின் ஓபன் செஸ் வென்று அசத்தல்….!!!!!!!!!

பாரசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றுள்ளது. அதில் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்திரி, லாசசர் யோர்டானோவ், காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி,அரிஸ்டென்பெர்க் உராசயேவ்(கஜகஸ்தான்), போன்றோரை இந்தியாவின் இளம்  கிராண்ட் மாஸ்டர் பிரத்யானந்தா வென்றுள்ளார். இந்த நிலையில் மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் ஏழு வெற்றி, 2 ட்ரா உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னை சேர்ந்த பிரக்யானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

மேலும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெக்டே,7.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையே சென்னையில் வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட்  தொடரில் இந்தியா ‘பி’ அணியில் பிரக்ஞானந்தா இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |