அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புரிமை தேசிய அளவியல் சட்டபூர்வமாகிய 50 வருட கால உத்தரவை ரத்து செய்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் முரணாக பெண்கள் கரு கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் மசோதாவை நிறைவேற்ற குடியரசு கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.