இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கனடா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய கனடா நிதி மந்திரி, ரஷ்ய நிதி மந்திரி கலந்து கொள்வது நியாயமற்றது என்று கூறினார்.
அதுமட்டுமின்றி தீயணைப்பு வீரர்களின் கூட்டத்திற்கு தீ வைப்பது போல் இருக்கிறது எனவும் கூறினார். மேலும் உக்கிரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நேரடியாக முழு பொறுப்பும் ரஷ்யா என்பதால் ரஷ்யா ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என கூறியுள்ளார்.