Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி வழக்கு…. வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. டிஜிபி அதிரடி எச்சரிக்கை….!!!!!!!!

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும் இரண்டு எஸ் பி, 350 காவலர்கள் அங்கு இருக்கின்றனர். இருந்த போதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கு நடைபெற்ற வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் கலவரம் செய்தவர்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த கட்ட விசாரணையில் தான் அங்கு என்ன நடைபெற்றது என்பது தெரியவரும். இந்நிலையில் அந்த பகுதியில் அதிகமான காவலர்கள் இருந்தும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இருக்கும் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தீயணைப்பு துறை அதிகாரிகள் பேசும்போது, தீயணைப்பு துறை வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் தீயை அனைப்பதற்கு தேவையான உபகரணங்கள் கைவசம் இருக்கிறது. உள்ளே செல்ல முடியவில்லை மூன்று வாகனங்களுடன் காத்திருக்கிறோம். ஆனால் போலீசார் பாதுகாப்பு அளித்தால் தான் உள்ளே சென்று தீயை அணைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |