Categories
அரசியல்

ஓபிஎஸ் பதவி யாருக்கு…..? இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்…. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு….!!!!!!!!!

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்களை செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளனர். இதற்கு இடையே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற பின் முதன்முறையாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து அதற்கு சீல் வைக்கப்பட்டிருப்பதால் தனியார் ஹோட்டல் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கின்றது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல் பற்றி விவாதம் மேற்கொள்ளப்படும் என தெரிகின்றது.

அதிலும் குறிப்பாக ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பை அவரிடம் இருந்து பறிப்பது பற்றி இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அதிமுக சட்டமன்ற கட்சி துணை செயலாளர் பொறுப்பு ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியனிடமிருந்து பறிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிகின்றது. இந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் இ பி எஸ் தேர்வான பின் ஓபிஎஸ் மனோஜ் பாண்டியன் உட்பட 45 பேரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக அறியப்படுபவார்கள்.

அதேநேரம் ஓபிஎஸ் இடம் இருந்து பறிக்கப்பட இருக்கின்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பை யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேவர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க இபிஎஸ் தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் ரேஸில்  முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஈபிஎஸ் க்கு நெருக்கமாக இருக்கும் சிலர் தங்களுக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகின்றது. இது பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது பற்றி எம்.எல்.ஏக்களுக்கு சொல்லித் தருவதற்கானகூட்டமே இது கட்சி நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய பதவி நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் உட்பட அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்ற கோரி எந்த மனு வந்தாலும் அதனை நிராகரிக்குமாறு ஏற்கனவே சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |