Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”வெளியாகும் அடுத்தடுத்த முறைகேடு” மதுரை தேர்வர்கள் பரபரப்பு கடிதம் …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த நியமனம் ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள  கடிதம் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் காவல்துறையில் பணியாற்றிய 3 பேர் முறைகேடாக 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுவிடைத்தாள்களை முன்கூட்டிய பெற்று தேர்ச்சி பெற்று பல்வேறு துறைகளிலும் அதிகாரிகளாக மாறியுள்ளனர் மேலும் அவர்களுடைய உறவினர்களையும் இந்த முறைகேடு போக அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற புகார் கூறப்பட்டிருக்கிறது.

இந்த புகாரில் முக்கியமாக காவலர் ஒருவர் காவல் துறையில் காவலராக பணியாற்றி இருக்கிறார். அதன்பிறகு குரூப்-4 தேர்வு எழுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய தாகவும், அதற்குப்பிறகு ஜெயில் செயலராக பணியாற்றி , அதன் பிறகு மீண்டும் TNPSC தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக பணியாற்றி தற்போது குரூப்-2 தேர்வு மூலம் சார்பதிவாளர் ஆக பணியாற்றி வருகிறார் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு காவலரும் இதேபோன்று முறைகேடாக தேர்ச்சி பெற்று தற்போது சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது.,

Categories

Tech |