முகம் நன்றாக பொலிவு பெறுவதற்காக மருத்துவ குறிப்பு
அழகு விரும்பாதவர்களே இல்லை. குறிப்பாக முகத்தை மிகவும் அழகாக வைத்திருப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏனென்றால் நம் கண்ணாடி முன் நின்று முதலில் பார்ப்பது முகம் அந்த முகத்தை மிகவும் பளிச்சென பளிங்குபோல் வைத்திருப்பதற்கு பல்வேறுவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தை தூய்மையாகவும் பளிச்சென்று வைத்திருப்பதற்கான முயற்சிகளுக்கு பலவகையான மருந்துகள் உள்ளன.
கஸ்தூரி மஞ்சள் முகப்பரு வியர்குரு நீர்க்கட்டி முகத்தில் தோன்றக்கூடிய நீர் வறட்சி தன்மை இவைகளை நீக்கி முகத்தை பளிச்சென்று வைத்திருக்கக்கூடிய ஆற்றல் கஸ்தூரி மஞ்சள் தூளைத் உள்ளது.
பாசிப்பயிறு மாவு பச்சை பயிறை நன்றாக தூய்மை செய்து அரைத்து வைத்துள்ள பாசிப்பயறு மாவு தோலில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கி தோலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் பாசிப்பருப்பு மாவு.
குப்பைமேனி இலைச் சாறு குப்பையாக இருக்கக்கூடிய இந்த மேனியை தங்கமாக மாற்றக்கூடிய மூலிகை குப்பைமேனி. இரும்புச் சத்தும் தங்க சத்தும் கொண்ட ஒரு மூலிகை நோய்களைப் போக்கும் குணம் கொண்டது.
பசும்பால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தின் வீரியத்தை அதிகரிக்கும் பசும்பால்.
கஸ்தூரிமஞ்சள், குப்பைமேனி இலைச்சாறு, பாசிப்பயிறு பொடி, பால் நான்கையும் சேர்த்து நன்றாக கலந்து பெஸ்ட் போல் செய்து கொள்ளவும். முகத்தை முதலில் தூய்மையான வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்துகொண்டு இந்தக் கலவையை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பான வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள மாசு நீங்கி நிலவைப் போல் முகம் பளிச்சென்று தோன்றும்.