பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உடையாகுளம் புதூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன்(21) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் சசிகலா(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சசிகலாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் இரு விட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு புதுமண தம்பதியினரை அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.