நாகை வெளிப்பாளையம் ஏழைப் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அல்லி முத்து மகன் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருக்கிறது. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பெயரில் சதீஷை குண்டச்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Categories