Categories
சினிமா தமிழ் சினிமா

75வது சுதந்திர தினத்தில் புதிய திட்டம்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!!!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஜே ஆர் 7 மற்றும் சாதக பறவைகள் இணைந்து ஒரு இசை திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டு இருக்கின்றார்கள். இதில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலை துறையின் பங்களிப்பு பற்றி அருங்காட்சியகம் இடம்பெற இருக்கிறது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் முதல் முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே  மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசை திருவிழா கொண்டாட இருக்கின்றனர்.

இதன் மூலமாக யுனைடெட் சிங்கர்ஸ் சாரிட்டபிள் டிரஸ் அமைப்பிற்கு நிதி திரட்ட இருக்கின்றனர். 75 முக்கிய பிரமுகர்களை இணைத்து இதில் பங்கு பெற வைக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதை வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி நீண்ட அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |