Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஜிஎஸ்டி மாற்றம்….. விலை உயரும் பொருட்கள் என்னென்ன….? லிஸ்ட் இதோ….!!!!

சண்டிகிரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 18ம் தேதி நாளை  முதல் சில  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் அதிகரிப்பு. கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்வு. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. எல்இடி விளக்குகள், கத்தி, கத்தரிக்கோல், பென்சில் ஷார்ப்பனர், பிளேடு, கரண்டி, ஃபோர்க், ஸ்பூன், வரைபடங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் ஜிஎஸ்டி உயருவதால் விலையும் அதிகரிக்கும்.

Categories

Tech |