Categories
மாநில செய்திகள்

தி.மு.க தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது….? டி.ஆர்.பி ராஜா திடீர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்பி பாலுவின் மகன் டிஆர்பி ராஜா இருக்கிறார். இவர் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து தகவல் தொழில் நுட்பத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பலர் புதிதாக தகவல் தொழில்நுட்பத் துறையில் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால் திமுக எம்பி செந்தில்குமார் திமுகவின் தகவல் தொழில்நுட்பமானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உறுப்பினர்களின் பலத்தில் சிறப்பாக செயல்படுகிறது என்றாலும், ஒரு ட்விட்டர் பதிவுக்கு 6 மணி நேரத்தில் குறைந்தது 6 லட்சம் லைக்குகள் வரவேண்டும். ஆனால் 240 லைக்குகள் மட்டுமே கிடைக்கிறது. எனவே தகவல் தொழில்நுட்ப பணிகளை துரிதப்படுத்தக்கூடிய நேரம் என்று நேரடியாக டிஆர்பி பாலுவை குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து டிஆர்பி ராஜா தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு பணிகள் சிறப்பாகவும் வேகமாகவும் நடைபெற்றாலும், அதன் பணியாளர்கள் வேகத்துக்கு ஈடாக பணியாற்ற வில்லை என்ற குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஆர்பி ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தகவல் தொழில்நுட்பத்தில் அனைத்து பணிகளையும் வெளிப்படையாக சொல்ல முடியாத காரணத்தினால் மேலோட்டமாக சொல்கிறேன். நாங்கள் அனைவரது பதிவுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டுமின்றி டுவிட்டர் மட்டும் சமூக ஊடகம் கிடையாது. அதை தவிர மற்ற ஊடகங்களையும் கவனிக்கும் பணி இருக்கிறது. இதனையடுத்து திமுக தகவல் தொழில்நுட்பத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். அனைவரும் எதிர்பார்ப்பதை விட தகவல் தொழில்நுட்பத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இடைத்தொடர்ந்து அவதூறான மற்றும் கீழ்த்தரமான கருத்துக்களை பதிவு செய்பவர்களை கவனித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்முடைய முதல்வரும் அனைத்து விஷயங்களையும் சட்டரீதியாக மட்டுமே கையாள வேண்டும் என கூறியுள்ளார்‌. எனவே நம்முடைய கட்சியில் இருப்பவர்களும் அநாகரிகமான அரசியலுக்கு செல்லாமல், நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். மேலும் தமிழக முதல்வர் குறித்தும் திமுக கட்சி குறித்தும் அவதூறான கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஐடி விங் ரிப்போர்ட்ஸ் என்ற சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய தலைவர் போன்று  அனைத்து அணிகளும் மாஸ் காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |