தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் செயல்படாது என தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் சற்றுமுன் அறிவித்தார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் இயங்காது என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். வழக்கம் போல் நாளை தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா? இயங்காதா? என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.