தேங்காயின் மகத்துவங்கள் எல்லா சீசனிலும் கிடைக்கும் அத்தியாவசிய சமையல் பயன்பாட்டிற்கு பயன்படும் தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அந்த தொகுப்பு.
தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது. விட்டமின், மினரல் அதிகமாக உள்ளதால் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு தேங்காயை முழுதாக சாப்பிட்டால் அன்றைய நாளுக்கு தேவையான முழு ஆற்றலையும் வழங்கி விடுகிறது.
இதில் அதிக அளவில் கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் உள்ளதால் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டால் 350 கிராம் கலோரி கிடைக்கின்றது. தேங்காய் தண்ணீரில் உள்ள சத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
தேங்காய் எண்ணெய் சமையலுக்கும் கூந்தல் உறுதிக்கும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் சூடு தணியும்.
தேங்காய் தண்ணீரை அடிக்கடி பருகி வந்தால் முதுமையை தவிர்க்கலாம் உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு தேங்காய் வழிவகுக்கின்றது.