பிரபல நாட்டின் மந்திரிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஓரினச்சேர்க்கை மற்றும் தத்தெடுப்பை அந்நாட்டின் சட்டம் அங்கிருக்கிறது. இந்த நாட்டில் பிராந்திய உறவுகளுக்கான மந்திரி ஆக கேயுக்ஸி இருக்கிறார். இவரிடம் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியின் போது ஓரினச்சேர்க்கையாளர் சட்டத்தை எதிர்ப்பது எதற்காக என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மந்திரி அவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ளார். இந்த கருத்து ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் மாற்று பாலினத்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக மந்திரி கேயுக்ஸி பதவி விலக வேண்டும் என கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதற்கு மந்திரி கேயுக்ஸி தான் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், நான் என்னுடைய கருத்தை கூறினேன் எனவும், அத்தகைய சட்டம் வந்தால் அதை நான் அங்கீகரிப்பேன் எனவும் கூறினார். இதனையடுத்து அந்த மக்கள் அனைவரிடமும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் எனவும், என்னுடைய கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.