Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்திரமுகி 2” சிறப்பாக தொடங்கிய படத்தின் பூஜை…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!

பிரபல நடிகரின் படம் பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுப்பதற்கு பி. வாசு பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் 2-ம் பாகத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவிக்காததால் வேறு ஹீரோவை வைத்து படத்தை எடுப்பதற்கு பி. வாசு திட்டமிட்டார். அதன்படி தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு பி. வாசுவின் முயற்சியில் வெற்றி அடைந்ததால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படப் பிடிப்பு  மைசூரில் தொடங்க உள்ள நிலையில், இன்று படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |