உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி ஆனது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு விமானத்தில் வந்த ஒரு குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது 2 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திராவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தீவிரமாகும் பட்சத்தில் ஊரடங்கு விதிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.