Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தாராபுரம் பகுதியில் திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்”…. வாலிபர் கைது…!!!!!

தாராபுரம் பகுதியில் நான்கு மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பெரியார் சிலை அருகே உள்ள தளவாய் பட்டணம் சாலையில் கணேசன் என்பவர் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று காலையில் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனால் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தயம் அருகே இருக்கும் காரியம்பட்டியில் பெட்ரோல் பங்கில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் போட்டு விட்டு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் தாராபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி வந்ததாக கூறினார்.

இதனால் கள்ளிமந்தயம் போலீசார் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். பின் வாலிபரை தாராபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பதும் அவர் தாராபுரம் பகுதியில் நான்கு மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனால் போலீசார் திருடிய நான்கு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தார்கள்.

Categories

Tech |