தூர்வாரும் பணியின் போது வாய்க்காலுக்குள் பொக்லைன் எந்திரம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாலிபாளையத்தில் ராஜ வாய்க்கால் இருக்கின்ற நிலையில் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலிருந்து வரும் கழிவு நீரானது ராஜ வாய்க்கால் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கின்றது. இந்நிலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ராஜவாய்க்காலை தூர்வாரும் பணியானது நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக வாய்க்காலை தூர்வாரும் பணியானது நடைபெற்றது.
அப்போது எதிர்பாராவிதமாக பொக்லைன் எந்திரம் ஒன்று வாய்க்காலுக்குள் சரிந்தது. இதில் டிரைவர் மற்றும் கிளீனர் காயமின்றி தப்பினார்கள். பின் சம்பவ இடத்திற்கு வந்த வார்டு கவுன்சிலர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். சம்பவம் இடத்திற்கு ராட்ஷச கிரேன்கள் கொண்டுவரப்பட்டு பொக்லைன் எந்திரத்தை வெளியே கொண்டு வந்தார்கள். இதையடுத்து அங்கு தூர்வாரும் பணியானது நடைபெற்றது.