Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள் என அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.பாட்சா அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு பெற்ற சில சங்கங்கள்  இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என தன்னிச்சையாக அறிவித்திருக்கின்றன.

இதுபோல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் தமிழகத்தில் மேலும் பதற்றம் தான் அதிகரிக்கும். இது போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக ஆதரவு பெற்ற சில பள்ளி சங்கங்கள் செயல்படுகின்றன. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி நீதி பெற்று தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |