நடிகர் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் நடிகை கத்ரினா கைப் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தனது திரைப்படங்களில் ஆக்சன் ஹீரோவாகவும் தெறிக்க விடும் வசனங்களையும் பேசி நடித்து ரசிகர்களை கவர்வார். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் சாந்தமாகவும் மிகவும் அமைதியானவரும் கூட. இந்த நிலையில் நடிகை கத்ரீனா கைப் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறியுள்ளதாவது, விஜயுடன் நான் ஒரு விளம்பரம் படத்தில் நடித்திருக்கிறேன். அந்த விளம்பர படத்தின் படபிடிப்பானது ஊட்டியில் நடைபெற்றது. அப்போது நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருகில் ஒரு ஷூ கால்கள் தெரிந்தது. ஆனால் அதை நான் கவனிக்காமல் தொடர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் கழித்து நான் நிமிர்ந்து பார்த்த பொழுது நடிகர் விஜய் எனது அருகில் நின்று கொண்டிருந்தார். அவர் எனக்கு பை சொல்ல வந்திருந்தார். நான் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்ததால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என விஜய் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். இதை என்னால் மறக்கவே முடியாது. ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய் இவ்வளவு எளிமையாக இருப்பது எனக்கு வியப்பாக இருக்கின்றது என கூறியுள்ளார்.