Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தின் அருகே கிடந்த பெண் பிணம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

தண்டவாளம் அருகே ஒரு பெண் பிணமாக கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே கணவாய் புதூர் பகுதியில் சென்னை-சேலம் இடையேயான ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே 60 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த பெண் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி மலர்விழி என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மலர்விழியின் வயிற்றுப் பகுதியில் காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தின் அருகே தூக்கி வீசப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திடீரென தண்டவாளத்தின் அருகே பிணம் கிடந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |