கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சியில் திம்மன்நாயக்கன்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் படி கடந்த 15ஆம் தேதி வழக்கம் போல் பூசாரி கோவிலை திறந்து பூஜைக்கு தயாரானார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அதன் பிறகு அம்மன் சிலையை பூசாரி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அம்மனின் வலது கண் திறந்து இருப்பதாக சிறுமி கூறினார். மேலும் பூசாரியும் அதை கண்டார். உடனே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் பரவியது. இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கோவிலுக்கு வந்து ஏளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து பக்தர்கள் கூறியது, கடந்த மூன்று நாட்களாக அம்மன் கண்திறந்து இருக்கிறது. அதிலிருந்து நீர் வடிகிறது. இது ஆச்சரியமாக உள்ளது என்று கூறினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.