டெல்லி சாஹிம் பாக் பகுதியில் உள்ள ஐந்து வாக்குப்பதிவு மையங்களும் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
நாளை மறுதினம் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி சாஹிப் பாகில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள வாக்கு பதிவு மையங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அங்குள்ள ஐந்து வாக்குப்பதிவு மையங்களில் கீழ் உள்ள 40 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்திருக்கிறார் தேர்தலில் இதுவரை 10 கோடி ரூபாய் ரொக்கமும் 31.6 ஆறு கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்து இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.