Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்….. வேறு பள்ளியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை…. அமைச்சர் அதிரடி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நேற்று பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோர் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தார். பின்னர் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வன்முறை நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளியின் சேதாரங்களை ஒழுங்குபடுத்த சில நாட்கள் எடுக்கும் என்பதால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |