விருதாச்சலம் சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள சாவடி குப்பத்தில் உள்ள குடிநீர் தொட்டி மூலமாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் தவித்த பொதுமக்கள் விருதாச்சலம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ட்ராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த குடிநீர் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் இருந்ததாக தெரிகின்றது. அதனால் பழுதடைந்து மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி சித்தலூர் பகுதி மக்கள் காலி குடங்களுடன் விருதாச்சலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து விருத்தாச்சலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது காலையில் வேலைக்கு செல்வதற்கு, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் ஏதுவாக வராமல் நேரம் கடந்து தரம் இல்லாத குடிநீர் வினியோகம் செய்வதனால் நாங்கள் கடும் அவதி அடைகின்றோம்.
அதனால் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.