Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். பெரும்பாலும் நீட் தேர்வை மாணவர்கள் பெரிய லட்சியத்துடன் எழுத செல்கிறார்கள். அதில் சில மாணவர்கள் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற தற்கொலைகள் இனிமேல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதாவது தமிழகத்தை சேர்ந்த 1,42,286நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மாணவர்கள் அனைவரும் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல மனநல ஆலோசகர் மூலமாக கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |