Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… 4 சதவீத அகவிலைப்படி சம்பள உயர்வு?…. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணிஉயர்வு, சம்பள உயர்வு முதலான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் வருடத்துக்கு இரண்டுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முறையும் என ஆண்டிற்கு இரண்டுமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. சென்ற கொரோனா காலகட்டத்தின்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு 31 சதவீதம் ஆக இருந்தது.

அதன்பின் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு இப்போது 34 சதவீகமாக உள்ளது. இதற்கிடையே அடுத்த சம்பள உயர்வை எதிர்பார்த்து மத்தியஅரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அத்துடன் DA உயர்வையும் எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மதிப்பீட்டை பொறுத்துதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது அதிகரிக்கிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் 3வது வாரத்தில் DA அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 4 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதன்படி 4 சதவீத அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதமாக அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கும். அதுமட்டுமல்லாமல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 எனில் மாதத்திற்கு ரூபாய் 6840 அளவிற்கு DA உயர்வு கிடைக்கும்.

Categories

Tech |