பேருந்து கவிழ்ந்து 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரிலிருந்து இருந்து புனேவுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். இந்தப் பேருந்து நர்மதா ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து கர்காட் என்ற இடத்தில் நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு, உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவியுள்ளது.