திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகில் அபதாங்கள் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது சென்னையிலிருந்து போளூர் நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் கடுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த அம்பிகா மற்றும் ஆரணி வி.ஏ.கே. புரம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் முதல் கட்ட விசாரணையில் முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது விபத்து நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.