ஹிட்லரின் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகள் என்ற நிறுவனம் ஏலம் விடுகின்றது.
அடாப் ஹிட்லர் என்று அழைக்கப்படும் ஹிட்லருக்கும் சொந்தமான கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” சுமார் இரண்டு முதல் நான்கு பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 31 கோடி. இந்த கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன.
ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் ஆண்டு நாசிப்படை தேர்தலில் வென்ற நாள். இந்த கடைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகள் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. கைக்கடிகார தயாரிப்பாளரும், ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து இது ஹிட்லர் வைத்திருந்த கைகடிகாரம் தான் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.