காணாமல் போன முதியவர் தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்க்கிளம்பி பகுதியில் செய்யது முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் செய்யது முகமது மகன்களில் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த 13-ஆம் தேதி அதிகாலை கடைக்கு டீ குடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்து அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் செய்யது முகமது இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியோரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.