Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!… தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பண மோசடி… ஏமார்ந்து போன தனியார் நிறுவன ஊழியர்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையில் வசித்து வருபவர் பிரேம் குமார் (38). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். சென்ற 27/02/2022 அன்று இவருக்கு தபால் வாயிலாக ஒரு பார்சல் வந்தது. அவற்றில் நாப்டால் ஸ்க்ராட்ச் அண்ட் வின் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தபாலை பிரித்துபார்த்த பிரேம் குமார் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பேசிய நபர் தான் நாப்டால் நிறுவன அதிகாரி என்றும் தங்களுக்கு பரிசுகள் விழுந்துள்ளது என்றும் தெரிவித்தார். அத்துடன் அதற்காக ஜி.எஸ்.டி. கட்டணம் மற்றும் நடைமுறை செலவுகளுக்கான கட்டணங்களை செலுத்தும்படி கூறினார்.

அதனை நம்பிய பிரேம் குமார் 4 வெவ்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் ரூபாய் 15 லட்சத்து 60 ஆயிரம் தொகையை செலுத்தி இருக்கிறார். இதற்கிடையில் குறிப்பிட்டவாறு பிரேம் குமாருக்கு எந்த பரிசும் வரவில்லை. இதன் காரணமாக சந்தேகமடைந்த அவர் தான் ஏற்கனவே தொடர்புகொண்டு பேசிய நபருக்கு போன் செய்தார். அப்போது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டது பிரேம் குமாருக்கு தெரியவந்தது. இது குறித்து பிரேம் குமார் கிருஷ்ணகிரியிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |