Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கடந்த 2 நாட்களாக வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே கொடைக்கானலுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மோயர்பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் நிலவிய ரம்மியமான சூழ்நிலையை கண்டு மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து குதிரை சவாரி, சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரி ஆகியவற்றில் சென்றனர். இந்நிலையில் பகல் 3.30 மணியளவில் ஒரு மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் மழை மற்றும் குளிர் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாரச்சந்தை வியாபாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். மேலும் நீண்ட நாட்களுக்கு கனமழை பெய்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது.

Categories

Tech |