வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனா நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது உள்ள வெப்பத்தின் தாக்கம் ஆனது கடந்த வருடங்களை விட அதிக அளவில் இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சில மாகாணங்களில் 40 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாக வெப்பநிலை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தோடு, பொதுமக்கள் வைரஸ் பாதிப்பு களையும் சந்திக்க வேண்டிய சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதனையடுத்து நேற்று ஒரு நாளில் மட்டும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகயுள்ளது. அதன் பிறகு அடுத்த 12 நாட்களுக்கு கடுமையான வெப்பத்தின் தாக்கம் குறித்த எச்சரிக்கை மக்களுக்கு விடப்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக 90 கோடி மக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.