டெல்லி தேர்தலுக்குப்பின் ஷாகின் பாக் ஜாலியன் வாலா பாக் ஆக மாறலாம் என்று எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் டெல்லியில் வரும் எட்டாம் தேதி நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஷாகின் பாக் காலி செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் கூறிவருகின்றனர். இதுகுறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாருதீன் கேள்வி எழுப்பப் பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம் என்றும் ஷாகின் பாக் ஜாலியன் வாலாபாக் ஆக மாறலாம் என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.