இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பாலை வீசி வருகிறது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் இனி வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் விட அதிகரிக்க கூடும் என கனித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வராத வகையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.