Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக்…. மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டையில் மது கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார் சாலையோரம் செயல்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக இருக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக்கை மூடக் கோரி டாஸ்மாக் பார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்த பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |