பெண்ணின் கைப்பையை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் எட்வின் பிரைட்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 2 மகள்களுடன் மார்த்தாண்டத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எட்வின் பிரைட்டின் ஒரு மகள் அங்கிருந்த நாற்காலியில் தனது கைப்பையை வைத்துவிட்டு முன் பகுதிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பை காணாமல் போனதே கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த கைப்பையை எடுத்து கொண்டு தப்பி செல்வதை அந்த பெண் பார்த்துள்ளார். இதனை அடுத்து எட்வின் பிரைட் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்தி விசாரணையில் அந்த நபர் சரல்விளை பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஏசுதாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.