ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி வாலிபரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த பணத்தை போலீசார் மீட்டனர்.
நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி பகுதியைச் சேர்ந்த கவிதரன் என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி உள்ளார். இதை கவிதரனும் நம்பி ஒரு லட்சத்து இருபது ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.
இதை அடுத்து கவிதரன் அந்த நபருக்கு தொடர்பு கொண்ட பொழுது அந்த எண்ணானது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பின் கவிதரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோசடி செய்த நபரின் வங்கி கணக்கை முடக்கி 1 லட்சத்து 20 ஆயிரத்தை கைப்பற்றினார்கள். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை கவிதரனிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.