பிரபல நடிகை வீட்டில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக தனி பீரோ வாங்கி வைத்திருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்நிலையில் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை நயன்தாராவுக்கு வாட்ச் என்றால் மிகவும் பிடிக்குமாம். இவர் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றால் வாட்ச் வாங்காமல் திரும்புவதே கிடையாதாம்.
இவருக்கு ரிச்சர்ட் மைல் வாட்ச் தான் மிகவும் பிடிக்குமாம். இதனையடுத்து நயன்தாரா அணியும் 1 வாட்சின் விலை ரூபாய் 1 கோடியே 20 லட்ச ரூபாய் ஆகும். இவர் தன்னுடைய வாட்ச் கலெக்சன்களை வைப்பதற்காகவே வீட்டில் தனி பீரோ வாங்கி வைத்திருக்கிறாராம். அது மட்டுமின்றி நயன்தாரா தனக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசாக கைக்கடிகாரங்களை தான் வாங்கி கொடுப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் நயன்தாரா தனக்கு நெருக்க மானவர்களுக்கும் பரிசு பொருட்களை வாங்கிக் கொடுப்பதில் காசு பணம் பார்க்க மாட்டார் என்பது சினிமா வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.