விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புலிக்குத்தி பாண்டி, டானாக்காரன், பாயும் ஒலி நீ எனக்கு, பகையே காத்திரு போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கி இருக்கின்றார்.
முழுக்க முழுக்க திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா கதை திரைக்கதை எழுதி இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் உருவாகி இருக்கிறது. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் கிரீன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கின்றது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். இதில் மிரட்டும் தொனியில் கத்தியுடன் விக்ரம் பிரபு இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ரெய்டு தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.