மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அங்காடிமங்கலம் கிராம மக்கள் தங்களுடைய தேவைகளுக்கு திருப்புவனம் நகருக்கு வந்து செல்கிறார்கள். இரண்டு மாவட்டத்தின் எல்லையிலும் உள்ள இந்த கிராமத்தை அனைத்து தரப்பினரும் அதிசயமாக பார்த்து செல்கிறார்கள். ஏனெனில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்திற்கு ஒரு இரட்டையர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தாலும் அனைத்து சமுதாயத்திலும் இரட்டைகள் உள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆய்வு மேற்கண்டதாக கூறும் பகுதி மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இந்த கிராமத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியான ஆடை, காலனி வாங்கி கொடுப்பதால் அவர்களுடைய பெற்றோர்கள் மட்டுமே அடையாளம் காணும் நிலை உள்ளது. இதனால் சினிமாக்களின் கதாபாத்திரங்களின் மூலம் நடக்கும் நகைச்சுவையான குழப்பங்கள் போன்று இந்த கிராமத்திலும் நடந்தது என்று அங்குள்ள கிராம மக்கள் புன்னகையுடன் கூறுகிறார்கள்.